பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (29) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த குறித்த நபர், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பின்னவல – பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.