ட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல்கள் வெடித்துச் சிறைஉடைப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சுற்றுவட்டார வீதிகளில் தொடர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சிறைஉடைப்புச் சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, நீர்கொம்பிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களில் 60 கைதிகளில் தற்போது 42 பேர் அங்குள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இன்று 980 கைதிகள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் முழுமையான பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலை அதிபதி மோகன் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.