சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல் நஸாரின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கழகத்தை விட்டு வெளியேறி தனது முதற் கழகமான போர்த்துக்கல்லின் ஸ்போர்டிங்கில் இணைவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபிய பொது முதலீட்டு நிதியமானது தனது கழகத்துக்கு உதவவில்லை என எதிர்ப்புத் தெரிவித்தே அல் நஸாரின் இரண்டாவது போட்டியை ரொனால்டோ தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
பருவகால முடிவில் 43 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு ரொனால்டோவைக் கைச்சாத்திடக் கூடிய சரத்து அவரது அல் நஸாருடனான ஒப்பந்தத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.