ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில்,
“இந்தத் தொகையில் மாற்றம் ஏற்படலாம். இராணுவத்துக்கு தேவையான நிதியை உறுதி செய்ய நாடாளுமன்றத்தை அணுகவுள்ளோம். மோசமானவர்களை கொல்ல மேலும் பணம் தேவைப்படுகிறது.
இது மிகப் பெரிய தொகை. இத்தகைய செலவினங்களுக்கு அரசியல் ஆதரவு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (19) இது தொடர்பாக தெரிவிக்கையில்,
எங்களிடம் ஏராளமான வெடிமருந்துகள் உள்ளன. ஆனால், போர் காரணமாக உக்ரைனுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதால் எம்மிடம் உள்ள வெடிமருந்துகள் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.