ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை 9031) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1072 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும், போதை மாத்திரைகளுடன் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 20 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.