மித்தெனிய – ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு வலஸ்முல்ல நீவான் மல்ஷா கொடித்துவக்கு முன்னிலையில் நேற்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவரை 12ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மித்தெனிய – தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சம்பத் மனம்பேரிக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சரித் மதுசங்கவையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் சம்பத் மனம்பேரிக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 12ஆம் திகதி எடுத்துக்கொள்ள நீதிமன்றத்தால் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.