யாழ்ப்பாணத்தில் 3200 போதை மாத்திரைகளுடன் கைதான நபர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட 3200 போதை மாத்திரைகளின் இன்றைய சந்தை பெறுமதி 09 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அறித்துள்ள வாக்குமூலத்தில், போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
அதன் காரணமாக, அவற்றின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், போதை மாத்திரைகளுக்கான கேள்வியும் அதிகரித்ததால், அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும், மாத்திரை ஒன்று 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கார்ட்டில் 10 குளிசைகள் உள்ளன.
அவை 3 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது எனவும் யாழில் 3200 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.