அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், வலுவான நீருள்ள இடங்களில் இறங்குவதையோ அல்லது குளிப்பதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார்.
ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் அவசரப் பிரச்சினைகள் இருந்தால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களான 117 க்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிக மழையினால் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளதுடன், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் போதெல்லாம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் உடனடியாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உதவி விநியோகத்தின்போது, நிறுவப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக அந்தந்த மாவட்டச் செயலாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார்.