பேஸ்புக்’ சமூக வலைதள பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான ‘ மெட்டா’ நிறுவனம், பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு இழப்பீடாக 288 கோடி ரூபாய் வழங்க உள்ளது. இதற்காக, 3.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2010ல் உலகம் முழுதும் 8.70 கோடிக்கும் மேற்பட்ட தனிமனிதர்களின் தரவுகளை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘ கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற தகவல் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக சமூக வலைதளமான பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதை ஏற்று, மெட்டா நிறுவனம், 288 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இழப்பீடு கோரும் பயனர்களுக்கு சி ல கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது.