கலேன்பிந்துவெவ – ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். மஹதிவுல்வெவவிலிருந்து தம்பலகமுவ நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பகுதியை சேர்ந்த 19 வயதுடைய உல்முதீன் சாஹில் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.