நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், உயிரிழப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குதல், உட்கட்டமைப்பு சேதம் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் உடனடியாகவே செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தாலும், நிலப்பயன்பாட்டு ஒழுங்குவிதிகள், உள்ளூர் தயாரிப்புகள், மீட்பு உதவிகளின் வேகம் போன்ற துறைகளில் பலவீனங்கள் வெளிப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.