பேரிடரின் போது தமக்கு உதவிய ஜனாதிபதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நன்றிக் கடிதம்

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் நேற்று (08) கடிதமொன்றைக் கையளித்தனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர்.

மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவு கூர்ந்தனர்.

இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர்.

மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார்.

vali

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

December 10, 2025

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா

uthaya

நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில

December 10, 2025

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய

Education

பாடசாலைகளுக்கான கல்விச் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம்

December 10, 2025

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி

rai.

புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது அறிவிப்பு

December 10, 2025

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான

Varunaga

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

December 10, 2025

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு

va

ஜனாதிபதியை சந்திக்க வட மாகாண கடற்றொழிலாளர்கள் முயற்சி!

December 10, 2025

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு

cum

மீண்டும் வருகிறார் கம்மின்ஸ்

December 10, 2025

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற

mats

‘மத்ஸ்யா 6000’; முதல் மனித ஆழ்கடல் பயணம்

December 10, 2025

முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர

par

மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?

December 10, 2025

இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம்

new

நியூயார்க் டைம்ஸ்; பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான்

December 10, 2025

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

mes

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மெஸ்ஸி!

December 10, 2025

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது.

Para

பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்

December 10, 2025

பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங்