பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு; அரசு வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுகிறது! – ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

கடந்த ஜனவரி 30ஆம் திகதி அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அடிப்படைச் சம்பளம் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 200 வழங்கப்படவுள்ளது.

மொத்த அதிகரிப்பான 400 ரூபாயில், 200 ரூபாயை நிறுவனங்களும் மீதி 200 ரூபாயை அரசாங்கமும் நிதி உதவியாக வழங்கும். “முதலில் 2,138 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குவோம் என்று அரசாங்கம் உறுதியளித்தது.

அப்போது பணவீக்கம் 1.5% ஆக இருந்தது. தற்போது பணவீக்கம் 5% வரை உயர்ந்துள்ள நிலையில், 1,750 ரூபாயை மட்டும் வழங்குவது தொழிலாளர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

“20 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் எந்தவொரு நிறுவனமும் தொடர்ந்து இயங்காது. பெருந்தோட்ட நிறுவனங்கள் தர்ம ஸ்தாபனங்கள் அல்ல. நஷ்டம் எனக் கூறி மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் ஏன் இந்த நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது?” என அவர் சாடினார்.

இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை. “என்னிடம் ஒப்பந்தத்தின் பிரதி உள்ளது.

நான் சொல்வது தவறென்றால் உண்மையான ஆவணத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்” என அவர் சவால் விடுத்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சட்டப்படி செல்லுபடியாகாது என அதில் ஒரு சரத்து இருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை உடனடியாகத் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி (Gazette) மூலம் அறிவித்து சட்டபூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சம்பள உயர்வைக் காட்டி சில தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் அளவு 20 கிலோவிலிருந்து 26 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது உண்மையான சம்பள உயர்வு அல்ல என அவர் குறிப்பிட்டார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்