விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாக தெரிகின்றது. அதைப்போல அடுத்த மாதம் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படங்கள் என்னென்ன ? என்பதனை பார்க்கலாம்
முக்கிய அம்சங்கள்:
ஜனநாயகன் முதல் கருப்பு வரை
பிப்ரவரி மாதம் வெளியாகும் படங்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் விஜய்யின் ஜனநாயகன் ஆகிய படங்கள் தான் வெளியாக இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீசாகமுடியாமல் போனது. எனவே பராசக்தி திரைப்படம் சோலோவாக நேற்று வெளியானது.
இருந்தாலும் ஜனநாயகன் இடத்தை நிரப்பும் வகையில் பல படங்கள் பொங்கலுக்கு வெளியாக தயாராகிவிட்டது. ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில், கார்த்தியின் வா வாத்தியார், திரௌபதி 2 என பல படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றது.
இந்நிலையில் வழக்கமாக பொங்கல் பண்டிகையில் தான் அதிக படங்கள் வெளியாகும். அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் எந்த ஒரு பெரிய படமும் அந்தளவிற்கு ரிலீசானது இல்லை. ஆனால் இம்முறை பொங்கல் பண்டிகையை காட்டிலும் பிப்ரவரி மாதத்தில் பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக தெரிகின்றது.