பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் – பிரதமர்

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி, ‘World Woman House’ உலகப் பெண்கள் இல்லத்தில் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

“Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழான உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய பிரதமர், உலகெங்கிலும் உள்ள பெண்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் அதிகளவில் தங்களது ஈடுபாட்டை உறுதிப்படுத்தி வருகின்ற போதிலும், அவர்களின் பங்களிப்புகள், குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறைகளில் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு ரீதியாகக் குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளில் இருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல, அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். தலைமைத்துவத்தில் இருக்கும் பெண்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், Character Assassination (தன்மைப் படுகொலை) மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டப்படுதல் போன்றவை, தலைமைத்துவத்தை இலக்காகக் கொண்ட பெண்கள் உட்படத் தகுதியுள்ள பலரை அரசியலிலிருந்து விலகச் செய்கின்றன அல்லது பங்கெடுப்பதைத் தவிர்க்கச் செய்கின்றன. இது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றது.

இந்தத் தடைகளை அகற்றுவதென்பது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல, மாறாக, பெண்கள் தன்னாதிக்கம், அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைப்பதேயாகும்.

மக்களின் மீண்டெழுதலுக்கான உத்வேகமும், அரசியல் அர்ப்பணிப்பும் இணையும்போது எதனைச் சாதிக்க முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். எமது தற்போதைய அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அர்ப்பணிப்பு வெறும் தொலைநோக்கினை மாத்திரம் பிரதிபலிக்கவில்லை; இது மேலும் அரவணைப்புமிக்க ஒரு நிர்வாகத்தை நோக்கிய மாற்றத்தையே அடையாளப்படுத்துகின்றது.

தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல, மாறாக அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் கூறிய பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில் பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மாத்திரமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்