பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழி துஷ்பிரயோகம்: கட்டளையை திருத்த கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும்” பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின்” ஒரு பகுதியாக ஆண்டுதோறும் “செம்மஞ்சள் தினம்” போன்ற அடையாள நிகழ்வுகளை நாங்கள் நடத்தியிருந்தாலும், இந்த சபையின் செயல்பாடுகள் மூலம் அவற்றை அர்த்தமுள்ள வகையில் விளக்க முடியவில்லை என்பது தமது அவதானிப்பாகும் என பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சாரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வாய்மொழியிலான துஷ்பிரயோகம் இடம்பெறும் போக்கு அண்மைய காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றுகள் முன்னால் உள்ள சவால் வெறுமனே தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக மக்களின் இறையாண்மை மற்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசியலில் பங்கேற்கவும் உள்ள உரிமையை இலக்காகக் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசியலில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு பாதகமான முன்னுதாரணமாகவும் அமைகிறது என்றும் ஒன்றியத்தின் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் ஆண் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய இரு தரப்பினரினதும் நடத்தை அல்லது கூற்றுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பரிந்துரையாகும். நிலையியற் கட்டளைகளின் கீழ் “பாராளுமன்றத்தில் ஒழுக்கம்” பிரிவின் மூலம் இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில், புதிய நிலையியற் கட்டளையைச் சேர்த்து நிலையியற் கட்டளைகளைத் திருத்துமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.