கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரா வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம்(4) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடாத்தப்பட்டது.
மேலும் ,வலயக்கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.