சீனா, சொங்குவிங் யொங்சுவான் ஸ்போர்ட்ஸ் சென்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற 17 வயதுக்குட்ட ஆசிய கிண்ண ஏ குழு தகுகாண் கால்பந்தாட்டப் போட்டியில் புருணை தாருஸ்ஸலாம் இளையோர் அணியை 4 -0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றிகொண்டது.
17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிச் சுற்றுக்கு இதற்கு முன்னர் ஒருபோதும் தகுதி பெறாத இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை இலங்கை இளைய வீரர்கள் திறமையாக விளையாடி வெற்றி பெற்றனர்.