புதிய தேசிய கனிமக் கொள்கை வரும்வரை: கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புதிய தேசிய கனிமக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றிச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தவிர, ஏனைய அனைத்து கனிம அகழ்வு உரிமங்களையும் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான மணல் மற்றும் கற்கள் போன்ற பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

இல்மனைட், ரூடைல், சிர்கோன் மற்றும் கார்னட் போன்ற கனிய மணல்களுக்கான அனைத்து ஆய்வு மற்றும் அகழ்வு உரிமங்களை வழங்குவது புதிய கொள்கை வெளியாகும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பான வழிகாட்டல்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தீர்மானங்கள் எடுப்பதைத் தவிர்ப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் முழுமையான உரிமச் செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.

மிரிஜ்ஜவில பகுதியில் கனிம மணலை அகற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

2024 செப்டம்பரில் போக்குவரத்து தொடர்பான கடிதமொன்றே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது ஆய்வுக்கோ அல்லது அகழ்வுக்கோ வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். இதன் மூலம் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை அவர் மறுத்தார்.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத அகழ்வுகளால் நாட்டிற்குப் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரச நிலுவைத் தொகையை செலுத்தாமை மற்றும் சட்டவிரோத அகழ்வுகள் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் அனுமதியுடன் “உடனடி சுற்றிவளைப்பு பிரிவொன்று” நிறுவப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்