வடக்கு புகையிரத மார்க்க புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பன்பொல மற்றும் கல்கமுவ புகையிர நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், காட்டு யானையொன்று புகையிரதத்துடன் மோதியதன் காரணமாக இந்த சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தால் புகையிரதத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கு மார்க்கத்தின் புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.