பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் நேற்று (10) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 7.6 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கினதோடு, மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸில் கடந்த 01ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 72 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.