அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக பிரித்தானிய அரசாங்கம் 55 பில்லியன் பவுண்ஸ் நிதியை ஒதுக்கியுள்ளது.
2029/2030 வரை நீடிக்கும் இந்த நிதித் திட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் தெளிவு ஆகியவற்றை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், சுத்த ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, ‘quantum computing’ போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை ஊக்குவிப்பதற்காக இந்தி நிதி பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், இதனால், கிடைக்கும் பொருளாதார பலன்கள், முதலீட்டை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், அரசாங்கத்தின் இந்த முதலீட்டால் வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.