இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா வடகிழக்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
றோயல் கனேடியன் மவுண்டட் காவல்துறை(Royal Canadian Mounted Police)தெரிவித்ததாவது, 25 வயதான குர்கிரத் சிங் மனோச்சா என்பவர் மார்ச் 13 ஆம் தேதி இரவு 11:10 மணியளவில் Charlie Lake boat ramp அருகே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.
மனோச்சா, மத்திய இந்தியாவின் உஜ்ஜயினி நகரத்தைச் சேர்ந்தவர். அவர் Fort St. John நகரத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள கல்லூரியில் வணிக மேலாண்மை படிப்பை பயின்று வந்தார்.
காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அந்த இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் மனோச்சா தீவிரமாக காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. காப்பாற்றும் முயற்சிகள் செய்யப்பட்ட போதிலும், அவர் காயங்களால் உயிரிழந்தார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாவட்ட குற்றப் பிரிவு (North District Major Crimes Unit) தெரிவித்ததாவது, இந்த விசாரணையில் பலர் தொடர்புடையதாகவும் இதுகுறித்து மேலதிக தகவல்கள் இப்போது வெளியிடப்படமாட்டாது என்றும் கூறியுள்ளது.