பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பாணந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தர்மசிறி பெரேரா தலைமையில் மற்றும் செயலாளர் நுவன் பெர்னாண்டோவின் பங்குபற்றுதலுடன் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.