பிரதமர் மோடி மீது அதிருப்தி!

இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் சமரசம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்தார்.

இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடா்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் கூட்டறிக்கை கடந்த பிப்.7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அரசு சமரசம் செய்திருப்பதாக கபில் சிபல் விமர்சித்தார். அவர் தெரிவித்திருப்பதாவது:

“பிரதமரிடம் ஒன்றைக் கேட்க வேண்டும், கடந்த 11 ஆண்டுகளில் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறீர்கள்? புதிதாக கட்டடங்களை எழுப்புதல் நல்ல விஷயம்தான். சத்தியமேவ ஜெயதே முழக்கத்தையும் நாம் கேட்கிறோம்.. ஆனால், ‘அசத்தியமே..’ கடந்த 11 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது.

“‘ஆத்மநிர்பார் (தற்சார்பு)’ என்பதை அவர்கள் தொடர்ந்து சொல்வதைக் கேட்டு வருகிறோம், இப்போது அது, ‘டிரம்ப் பே நிர்பார் (டிரம்ப் சார்பு)’ என்றாகிவிட்டதுபோலும்… தேர்தல்களில் எப்படி வெற்றி பெறுவதென்பதை அறிந்து வைத்துள்ள பாஜகவுக்கு, எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியவில்லையே..!”.

அமெரிக்க செயல் ஆணைகள் 14066, 14329 ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய கபில் சிபல் குறிப்பிடும்போது, “இந்தியா ரஷிய எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொள்முதல் செய்தால், அமெரிக்காவால் மீண்டும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். டிரம்ப் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டு பேசும்போது, ‘அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஒத்துப்போகும் வகையில் இணங்கிச் செயல்பட இந்தியா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக்’ குறிப்பிட்டார்.

இந்த அரசிடம் நான் ஒன்றைக் கேட்க வேண்டும், ‘எதற்காக இதற்கு ஒத்துக்கொண்டீர்கள்?’ வரலாற்றில் இப்படி ஒருபோதும் நிகழ்ந்ததேயில்லை! ‘நமது வெளியுறவுக் கொள்கை, பிற நாட்டின் கொள்கையுடன் ஒத்துச் செயல்படும்’ என்பதை நமது பிரதமரும் அரசும் ஒத்துக்கொண்டுள்ளது” என்றார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஐம்பதாயிரம் கோடி டாலர் (500 பில்லியன்) அமெரிக்க பொருள்களையும் அந்நாட்டுச் சேவைகளையும் வாங்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளதைக் கடுமையாக விமர்சித்த கபில் சிபல், நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பிரதமர் விவாதிக்கவும் வலியுறுத்திக் கேட்டுகொண்டார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் விமர்சனங்களை சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு