பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு அரச தாதியர்களும் தயார்?

அரச தாதியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (10) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச சேவையில் 40ஆயிரத்துக்கும் அதிகமான தாதியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும் சுகாதார அமைச்சரோ அரசாங்கமோ இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இல்லை.

தொடர்ந்து பதவி உயர்களை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன, ஆட்சேர்ப்புகள் தேவையான அளவு மேற்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில் தற்போது வெளிநாடு செல்லும் விடுமுறையும் இரத்துச்செய்யப்பட்டிருக்கிறது.

அதேநேரம் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. தரம் குறைந்த மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

சத்திரசிகிச்சைக்கு தேவையான மருந்துப் பொருட்கள் இல்லாமமையால் அதனை வெளியில் எடுத்துவர எழுதிக்கொடுக்கிறார்கள். இதன்போது நோயாளர்களுடன் முரண்படுவது தாதியர்களாகும்.

இவை எதற்கும் தீர்வு இல்லாமல் இருக்கிறது. இவை தொடர்பில் கலந்துரையாட சுகாதார அமைச்சரிடன் சந்தர்ப்பம் கேட்டபோதும், அமைச்சர் கலந்துரையாடலை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

சுகாதார அமைச்சர் அமைச்சு பதவி ஏற்றுக்கொண்டு ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு தடவைகளே கலந்துரையாடலுக்கு வந்திருக்கிறார்.

அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளவும் இன்று தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிலையே இருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்களுடன் மாத்திரம் கலந்துரையாடி சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்லும் போக்கையே காண்கிறோம்.

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை பெற்றுக்கொள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லவேண்டி இருக்கிறது.

தபால் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் தொழிற்சங்க நடவடிக்கை சென்றே பேச்சுவார்த்தை ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதனால் சுகாதார அமைச்சர் தயவுசெய்து கலந்துரையாடலுக்கு வந்து, தீர்க்க முடியுமான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும். முடியாத பிரச்சினைகள் தொடர்பில் காலம் எடுத்து தீர்த்து காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. அதேநேரம் தாதியர்கள் 3ஆயிரம் பேர்வரை இன்று வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் 1500பேர் தொழிலை விட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு 20ஆயிரத்துக்கும் அதிகம் தாதியர் வெற்றிடம் காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் புதிதாக இணைைத்துக்கொள்வதை தவிர்த்து வருகிறது.

அத்துடன் நாட்டில் 18 தாதியர் கல்லூரிகள் காணப்படுகின்றன. அந்த கல்லூரிகளில் கற்பிப்பதற்கு போதஹமானளவு பேராசிரியர்கள் இல்லை. அதனால் அந்த கல்லூரிகள் வீழ்ச்சியடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

அதேநேரம் அரசாங்கம் வாக்குறுதி அளித்த தாதியர் பல்கலைக்கழகம் அமைக்கும் வேலைத்திட்டத்தையும் பிற்படுத்தி வருகிறது. தாதியர்களை உருவாக்குவதற்கு அரசாங்கத்திடம் எந்த நடவடிக்கையும் இல்லை. என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.