ஸ்கார்பாரோ தென்மேற்கு தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் (MPP), ஒன்டாரியோ என்.டி.பி (NDP) கட்சியின் துணைத் தலைவருமான டோலி பேகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் மத்திய அரசு (Federal) இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பாரோ தென்மேற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பில் பிளேயர் (Bill Blair), ஐக்கிய ராச்சியத்திற்கான (UK) கனடிய தூதராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்தத் தொகுதிக்கான ஆசனம் வெறுமையானது.
என்.டி.பி-யின் முக்கிய முகமாக இருந்த டோலி பேகம், தற்போது லிபரல் கட்சியில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.