இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தாய்லாந்து பாராளுமன்றத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
‘திறந்த அரசாங்க கூட்டாண்மை’ என்ற தலைப்பில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றபோதே அவர் அந்நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிடச் சென்றிருந்தார்.
இதன்போது உள்ளடக்கமான ஆட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்துவது தொடர்பாக தாய்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதலானோருடன் கலந்துரையாடினார்.