பெர்ரி (Barrie) நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு வெளியே ஆபாசமான முறையில் நடந்துகொண்ட (Indecent act) ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 7:40 மணியளவில் க்ளௌக்லி டிரைவ் (Cloughley Drive) பகுதியில், பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
பிள்ளைகளை பாடசாலையில் விடும் நேரத்தில், நபர் ஒருவர் பாடசாலை வளாகத்திற்குள் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெர்ரி பொலிஸ் சேவையின் அதிகாரிகள், மேலதிக அசம்பாவிதங்கள் ஏதுமின்றி சந்தேகநபரைத் தங்களது காவலில் எடுத்தனர்.
விசாரணையின் போது, அந்த நபரிடம் அவருக்குச் சொந்தமில்லாத 14 டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியமை (Breach of recognizance) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 28 வயதுடைய நபர் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.