ஹரியானாவின் பல்வால் மாவட்டம் கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசிம் அக்ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்பில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உளவு பார்க்கும் வேலையை வாசிம் அக்ரம் செய்துவந்துள்ளார்.
அக்ரம் தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் உரையாடல்களை போலீஸார் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானின் மற்றொரு உளவாளியான தவுபிக்கை கைது செய்து விசாரித்தபோது அவர் அக்ரம் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போதுதான் உண்மைகள் தெரிந்தது.
அக்ரம் மற்றும் தவுபிக் இருவரும் இணைய அழைப்புகள் மூலம் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
photo – Meta AI