‘பலஸ்தீனத்துக்கு விடுதலை’ கோரி கொழும்பில் பேரணி!

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் ஒன்றுகூடிய பெண் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரிந்த இஸ்ரேலியக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

நீண்டகாலமாக காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த தாக்குதல்கள் அண்மையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இதுவரை காலமும் பலஸ்தீனத்தில் பாரிய மனிதப்பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் நிகழ்த்திய இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் உள்ள பலஸ்தீனத்தூதரகத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை கவனயீர்ப்புப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்றைய தினம் பலஸ்தீனத்தூதுரகத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணியில் பங்கேற்றிருந்த பெண் செயற்பாட்டாளர்கள் ‘பலஸ்தீனத்துக்கு விடுதலை’, ‘போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுங்கள்’, ‘போலியான தற்காலிகப் போர்நிறுத்தம்’, ‘செம்மணி முதல் காஸா வரை – நிலம் மறக்காது’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்துடன் பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் கோஷங்களையும் எழுப்பினர்.

மேற்படி பேரணி ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி நகரத்தொடங்கிய வேளையில், பொலிஸாரும் அவர்களுக்குச் சமாந்தரமாக ஐ.நா அலுவலகம் நோக்கி நகர்ந்தனர்.

பேரணியினர் ஐ.நா அலுவலக அதிகாரியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் தற்காலிகப் போர்நிறுத்தம் முற்றிலும் பொய்யானது எனவும், அதனையும் மீறி கடந்த சில தினங்களில் சுமார் 200 பேர் வரை இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ்வாறு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேலையும், அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவையும் தான் வன்மையாகக் கண்டித்தாகத் தெரிவித்தார்.

மேற்படி அமைப்பின் செயற்பாட்டாளர் அனீஷா ஃபிர்தௌஸ், பலஸ்தீனத்தில் பெரும் எண்ணிக்கையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

tru

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும்!

November 18, 2025

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர்

el

தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியா, ஈரானை நம்பியுள்ளது ஆப்கான்!

November 18, 2025

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதால், தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக,

kee

FACETS Sri Lanka-உத்தியோகபூர்வ நிலைச்சொத்து அனுசரணையாளராக ஜோன் கீல்ஸ் !

November 18, 2025

கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2025 இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறும் முதன்மையான

ka

இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு

November 18, 2025

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும்

tee

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

November 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை

in

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…

November 18, 2025

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

en

ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

November 18, 2025

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.