கனடாவின் பல குற்ற செயல்களில் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான 23 வயது நிக்கலஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மாகாண பொலிஸார் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் குறித்த நபரை தேடி வந்தனர்.
கொள்ளை மற்றும் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஐந்து வருடம், சிறைத்தண்டனையில் இருந்து வந்த நபர் சிறையில் தப்பியோடியிருந்தார்.
அக்டோபரில் வெளியிடப்பட்ட கனடாவின் அதிகம் தேடப்படும் 25 பேரின் பட்டியலில் சிங் 15வது இடத்தில் இருந்தார்.ரோண்டோவில் பாத்ரஸ்ட் Bathurst மற்றும் டுன்டாஸ் Dundas தெருக்களின் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பொலிஸார் ஒரு துப்பாக்கி,மற்றும் குண்டுகளையும் சம்பவ இடத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.