அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சர், டில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார்.
வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்த தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும் முடிவு செய்தனர்.
வர்த்தகம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும் முடிவு செய்தனர்.
அடுத்த சில மாதங்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.