டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் நொமன் அலி முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.ஜஸ்பிரிட் பும்ரா, 2. நொமன் அலி. 3. மற் ஹென்றி, 4. பற் கமின்ஸ், 5. ககிஸோ றபாடா, 6. ஜொஷ் ஹேசில்வூட், 7. ஸ்கொட் போலண்ட், 8. நேதன் லையன், 9. மிற்செல் ஸ்டார்க், குஸ் அட்கின்ஸன்.