பதுளையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பதுளை – ஹாலி – எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்றுள்ளது.
உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹாலி – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.