நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்பங்களாதேஷு க்கு 203 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை சார்பாக மூவர் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். வெறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை. இதன் மூலம் இலங்கையின் துடுப்பாட்ட வரிசை எளிதில் சரியக்கூடியது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
விஷ்மி குணரட்ன முதலாவது பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து அணித் தலைவி சமரி அத்தபத்துவும் ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
சமரி அத்தபத்து 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கி இருந்தன.
அவரைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழந்தன. (100 – 4 விக்.)
எனினும் ஹசினி பெரேராவும் நிலக்ஷிக்கா சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
நிலக்ஷிக்கா சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவதாக ஆட்டம் இழந்த ஹசினி பெரேரா 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஷொர்னா அக்தர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபேயா கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பங்களாதேஷ் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.
image-ESPN