பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்
அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர்.
புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.