நாளை (21) நடைபெறவுள்ள நுகேகொடைப் பேரணியால் உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்த கரிசனை பற்றி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளதது.
ஐக்கிய மாற்று அணியான (ඒකාබද්ධ විකල්පය) லங்கா ஜனதா கட்சி, அருணலு ஜனதா கட்சி, மற்றும் சிங்கள தீப முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை.
நாளை (நவம்பர் 21) நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தின் காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு (A/L) முகம் கொடுக்கும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஐக்கிய மாற்று அணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1. பரீட்சைக்கான தாக்கம்:
“நாளை (21), உயிரியல் பரீட்சையும், பிற்பகலில் அரசியல் விஞ்ஞானப் பரீட்சையும் நடைபெறுகிறது. பரீட்சை மாலை 4 மணி வரை நீடிக்கிறது. நுகேகொடை ஒரு கல்வி மையமாகும்.”
மாணவர்கள் நலன் முக்கியம்:
“நாட்டைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், முதலில் குழந்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.”
பங்கேற்க மறுப்பு: “எங்கள் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம், ஆதரவளிக்கப் போவதுமில்லை.” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
அறிக்கையை வெளியிட்ட கட்சிகள் மற்றும் தலைவர்கள்
இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்ட ஐக்கிய மாற்று அணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. கட்சி – லங்கா ஜனதா கட்சி (Lanka Janatha Pakshaya) – தலைவர்- சாலிக்க பெரேரா (Shalika Perera)
2. அருணலு ஜனதா கட்சி (Arunalu Janatha Pakshaya) தலைவர் – டொக்டர் கிரிஷான் (Dr. Krishan) 3. சிங்கள தீப முன்னணி (Sinhala Deepa Peramuna) தலைவர் – ஜயந்த லியனகே (Jayantha Liyanage)
By C.G.Prashanthan