நீதியான வரிக் கொள்கை அவசியம்

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான மற்றும் நீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

மொத்த அரச வரி வருவாய்க்கு எவ்வித பாதகமான தாக்கமும் ஏற்படாத வகையில், வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்காக ஜனாதிபதியிடம் பல தொழிநுட்ப மற்றும் பகுப்பாய்வு ரீதியான முன்மொழிவுகளைத் தமது சங்கம் சமர்ப்பித்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் மிகவும் கடினமான கால கட்டங்களில் நாட்டிற்காகத் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்களுக்கு, வரிக் கொள்கை தொடர்பாக விரைவான நிவாரணமும் நியாயமும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் அரசாங்கம் 5,400 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாயை ஈட்டியுள்ளதாகவும், இது நாட்டின் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த வரி வருவாய் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE tax) முறையில் சில திருத்தங்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டில் உழைக்கும் போது செலுத்தும் வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய வரி முறையின் கீழ் தமது சம்பளத்தில் சுமார் 36 சதவீதத்தை நேர்முக வரியாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக மறைமுக வரியாகவும் கணிசமான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையின் கீழ், நாட்டின் பெறுமதிமிக்க மனித வளத்தையும் அறிவையும் நாட்டிற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்வதற்கு நிலையான மற்றும் மூலோபாய ரீதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானது என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தகைய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாட்டின் பெறுமதிமிக்க தொழில்முறை மனித வளம் இழக்கப்பட்டு, இலங்கை “அறிவுப் பாலைவனமாக” மாறும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, நாட்டின் வரி வருவாயைப் பாதுகாக்கும் அதேவேளையில், வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்களுக்கு நியாயமான வரிச் சூழலை உருவாக்குவது அவசரத் தேவையாகும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

WhatsApp Image 2026-09-30 at 17.47.23

பீடத்தில் படிந்த நிழல்கள்: நல்லூரில் நிலவும் சீற்றம்

September 30, 2026

நல்லூர் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றது.. 1987 செப்டம்பரில் வரலாற்று சிறப்புமிக்க பன்னிரண்டு நாட்கள் இந்த மண் ஒரு தியாகியின் கடைசி

WhatsApp Image 2026-09-30 at 19.12.02

வைத்திய நிபுணர் சயந்தன் பேராசிரியராகப் பதவியுயர்வு!

September 30, 2026

சத்திரசிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ள வைத்திய நிபுணர் பா.சயந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சத்திரசிகிச்சைத் துறையின் சிரேஷ்ட

images512-34141790676470

“தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொ*லை வழக்கு!” – சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை அதிரடி ரத்து

September 30, 2026

மதுரை: நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை

5d14e01d6c99bb1b28185707aa36bad317700828248711319_original

“ஒருவரின் குடும்பத்தை அரசியலுக்குள் இழுப்பது நாகரிகமான அரசியல் அல்ல!” – எடப்பாடி பழனிசாமிக்கு ராஜ்மோகன் கடும் பதிலடி!

September 30, 2026

சென்னை: தனிநபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குள் இழுப்பது ஒருபோதும் நாகரிகமான அரசியலாகாது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய

images (55)

“பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதிகளில் வென்றிருக்காது!” – எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரித் தாக்கு!

September 30, 2026

கோவை: பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது எனத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிசாமியைக்

G_uhZrwaAAAcoJB

“கர்நாடக முதல்வரைக் கண்டு உங்களுக்குப் பயமா?” – தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி!

September 30, 2026

சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதலமைச்சரைக் கண்டித்துப் பேசத் தமிழக முதலமைச்சர் விஜய்க்குப் பயமா என அதிமுக

_119575072_d1e4b29a-9d6c-4cbf-86cf-8bccb955651f.jpg

“மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?” – அகற்றுதல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சீமான் சரமாரிக் கேள்வி!

September 30, 2026

சென்னை: நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய மக்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று கூறி அரசு அகற்றி

maalai-malar_2026-09-29_9mxmvooi_cmm

“40 கி.மீ தூரம் ஓடும் காரின் மேற்கூரையில் பயணம்!” – காவலருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டு!

September 30, 2026

சென்னை: தனது உயிரைப் பணயம் வைத்து ஓடும் காரின் மேற்கூரையில் பயணித்துக் குட்கா கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்த தலைமைக் காவலர்

ranil 1

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது ஒளிப்பதிவாளர் தாக்குதல்!

September 30, 2026

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்

6l

பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் சேதம்

September 30, 2026

பெல்மடுல்ல லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று

arre

CEB ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது

September 30, 2026

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக்

Murder

கடுகன்னாவ பொலிஸ் பிரிவில் ஒருவர் கொலை

September 30, 2026

கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுங்கல பகுதியில் நேற்று மாலை பாட்டிலால் தாக்கப்பட்டதில் காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை