ன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு நீதிமன்ற அவமதிப்பாக மாறுமா என்பது குறித்து விசாரணை நடத்தி, அதன் முடிவுகளை நீதிமன்றத்திற்கு அறிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முந்தைய தவணையின் போது நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக, விமல் வீரவன்ச கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக அமையுமா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவைக் கொண்ட குறுவட்டு (CD) ஒன்றை மன்றில் சமர்ப்பித்தே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டிய அவர், சம்பவம் தொடர்பாக தகுந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிவானைக் கேட்டுக்கொண்டார்.
சமர்ப்பணங்களைக் பரிசீலித்த தலைமை நீதிவான், இச்சம்பவத்தை தமக்கு எதிரான தனிப்பட்ட பிரச்சினையாக மட்டும் கருதாமல், ஒட்டுமொத்த நீதித்துறையின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகக் கருத வேண்டும் எனக் குறிப்பிட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதன் முடிவுகளை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டார்.