நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு (Harshana Nanayakkara) எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, சமகி ஜன பலவேகயவின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தனைத் தொடர்ந்து, நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
முன்னதாக, ஜூலை 21 அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளித்தது.
பிரேரணைக்கான காரணம்:
சமீபத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தனது பொறுப்பையும் கணக்கக்கூறலையும் (Responsibility and accountability) நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம்சாட்டியே எதிர்க்கட்சியினர் இப் பிரேரணையைக் கொண்டுவந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜூலை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இப் பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.