பல கனடிய தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், நிதிப் பறிமுதல் (Extortion) என்பது அன்றாட வாழ்வின் ஒரு கடுமையான நிஜமாக மாறியுள்ளது. இது சமூகங்களுக்கும் குடும்பங்களுக்கும் அச்சம், மிரட்டல் மற்றும் தீமைகளை ஏற்படுத்துவதுடன், கனடியர்களின் பாதுகாப்பு உணர்வையும் பாதிக்கிறது.
இவ்வகை குற்றங்கள் பெரும்பாலும் எல்லைகள் தாண்டி செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளால், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், அரசுகள், சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை இன்றியமையாததாகும் என கனடா நிதித்துறை அறிவித்துள்ளது.
கனடியர்களை பாதுகாக்கும் நோக்கில், François-Philippe Champagne (நிதி மற்றும் தேசிய வருவாய் அமைச்சர்), Rechie Valdez (பெண்கள் மற்றும் பாலின சமத்துவ அமைச்சர் மற்றும் சிறு வணிகம் மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர்), Maninder Sidhu (சர்வதேச வர்த்தக அமைச்சர்), மற்றும் Shafqat Ali (கருவூல வாரியத் தலைவர்) ஆகியோர் இன்று, கனடா முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில்—பறிமுதல் குற்றங்களை கண்டறிதல் முறியடித்தல் திறன்களை வலுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி நுண்ணறிவு தகவல்கள் சேகரிக்கப்படும் மற்றும் பகிரப்படும் முறைகளை மேம்படுத்துவதன் மூலம், சட்ட அமலாக்க அதிகாரிகள் குற்றவியல் வலையமைப்புகளை திறம்பட கண்காணித்து, விசாரணைகளுக்கு ஆதரவளித்து, குற்றத்திற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதே எமது பிரதான இலக்காகும் என கனடா நிதித்துறை மேலும் தெரிவித்துள்ளது.