சீரற்ற வானிலை காரணமாக, இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும், ரயில் ஒன்று தடம்புரண்டமையினாலும் இன்று (20) இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே, பலான மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, இன்றைய தினம் 18 ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாளைய தினமும் 4 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.