பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவிற்கு எதிராக ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய வர்த்தகர் நிமால் பெரேராவையும் கைதுசெய்யவேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலஞ்சம் வழங்குவதும் குற்றம் என்பது இலஞ்ச ஊழல் ஆணைக்குகுழுவிற்கு தெரிந்திருக்கவேண்டும்.
இலங்கையில் பல மோசடிகளில் ஈடுபட்ட பின்னர் நிமால் பெரேரா நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.
நாமல்ராஜபக்வின் கைதுகாரணமாக பெரமுனவின் அனுரதாபுர் பேரணி பெரும் வெற்றியை பெரும் பெருமளவு மக்கள் கலந்துகொள்வார்கள்.
அரசாங்கம் உண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு உதவிபுரிகின்றது,எதிர்கட்சியினர் அனைவரும் அதில் கலந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.