நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் (Department of National Archives) பணிப்பாளர் நாயகம் நதீரா ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நதீரா ரூபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அவற்றில் சுமார் 100 வருடங்கள் பழமையான அரச ஆவணங்களும் அடங்குகின்றன.
பதுளை, கண்டி, நுவரெலியா உள்ள மாவட்டங்களில் உள்ள 40 அரச அலுவலகங்களில் உள்ள முக்கிய அரச ஆவணங்கள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், பொதுமக்களுக்கு அன்றாட வாழ்கையில் தேவைப்படும் முக்கிய ஆவணங்களும் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளன. இதனால் பல பரம்பரைகள் பாதிக்கப்பட கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.