Canada-U.S.-Mexico ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தகம் செய்யப்படும் வாகனங்களுக்கான சிறிய வரி விலக்குடன், November 1 தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக பார ஊர்திகளுக்கு 25 சதவீத வரியை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன்று கையெழுத்திட்டார்.
CUSMA என அழைக்கப்படும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்கும் பாரஊர்திகள் அவற்றின் அமெரிக்க உற்பத்தி இல்லாத பாகங்களுக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.
வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடங்கும் ஆட்டோ பாகங்களுக்கு இந்த வரிகள் இப்போதைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்துகள் மற்றும் motorcoache ஆகியவற்றிற்கு 10 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் கனரக வாகனங்களுக்கான வரிகள் விதிக்கப்படும் என்று Trump அச்சுறுத்தினார், இது அமெரிக்க தொழில்துறையை வெளிப்புற போட்டியிலிருந்து பாதுகாக்கும் என்றும் அவர் விளக்கம் கூறினார்.
இந்நிலையில், இரும்பு வரிகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள வாகனத்துறைக்கு இந்த வரிகள், விலைகளை மேலும் உயர்த்தக்கூடும் என்று கூறி American Trucking Association வரிகளுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.