தமிழ் திரையுலகின் நட்சத்திர வாரிசான ஐஸ்வர்யா அர்ஜுன் கதையின் நாயகியாக நடித்திருக்கும்’ சீதா பயணம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அசல் சினிமா’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதா பயணம்’ எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன், துருவா சர்ஜா , பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, சரண் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார். இளம்பெண் ஒருவரின் நோக்கமற்ற பயணத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆஹா ஓஹோ என்பான்டி.. அழகி நீதானே என்பான்டி..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் சுரேஷ் ஜித்தன் எழுத, பின்னணி பாடகி அனுராதா பட் பாடி இருக்கிறார். திருமண வைபவம் ஒன்றில் பங்கு பெற்றும் இளம்பெண் – மணப்பெண்ணின் உணர்வுகளை பற்றிய கொண்டாட்ட பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் – அனைத்து சுப நிகழ்வுகளிலும் இனி இடம்பெறும் வகையில் இனிமையாக அமைந்திருப்பதால் ரசிகர்களிடமும் வரவேற்பினை பெற்று இருக்கிறது.