சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது.
மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோல்களை லூயிஸ் டியஸ் பெற்றதோடு, பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா நீவிஸ் பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுடனான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸிஸ் மக் அலிஸ்டர் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற போர்த்துக்கல் கழகமான ஸ்போர்டிங்குடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் சமப்படுத்தியது.