கனடா வெளியுறவுத் திணைக்களமானது, நாடு முழுவதும் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றும் தனது ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டாவாவிற்கு இடம்பெயராத ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் கனடாவின் எந்தப் பகுதியில் இருந்தும் பணியாற்றலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், இப்போது அந்த விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.
ஒட்டாவாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவிற்குள் அனைத்து ஊழியர்களும் வசிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.