தேசியப் பெருமையின் அடையாளங்களாக பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் சாதனைகள் இருக்க வேண்டும் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட நேர்மையும் சிறந்த சுயாதீனமும் கொண்ட ஒரு கல்விமானாகவுள்ள பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் சாதனைகள் அவமதிப்பிற்குரியதாக அன்றி, தேசிய பெருமையின் அடையாளங்களாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்கையில் அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்குள் அவர் உள்வாங்கப்படுவது கடும் கவலையைத் தோற்றுவிப்பதாக பெண் உரிமைகள் துறையில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய சுயாதீன கல்விமான்களது நற்பெயருக்குக் களம் விளைவிக்காத வகையில் விசாரணை நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்யுமாறும், பேராசிரியர் விக்கிரமசிங்கவின் தொழில்முறை சுதந்திரம், கௌரவம் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசமான்ய ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி சுபாங்கி ஹேரத், கலாநிதி ரேணுகா பத்திரண, ஜி.யு.எஸ். குணவர்தன, தீகு முனசிங்க, பெண் செயற்பாட்டாளர் புஷ்பா ரம்லினி ரத்நாயக்க, சரோஜா சிவச்சந்திரன், ஷிரீன் சரூர், விசாகா தர்மதாச, வித்யா பெரேரா, நிர்மலி விக்கிரமசிங்க, சாவித்திரி ரோகு, ஸ்ரீயானா பெரேரா, உதயங்கனி தழுவத்த, ஜீவனி காரியவசம், குமுதினி சாமுவேல், சரினா ரஹீம், சுஹாரா அஸீஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஏகோபித்த ஆதரவு அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அரச நிதியைப் பயன்படுத்தியதாக அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிகழ்வின் போது, பேராசிரியர் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. பாலின சமத்துவம் குறித்த அவரது விரிவான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கொள்கை ரீதியான பணிகளைப் பாராட்டி, வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அவரை ‘முன்னணி இலங்கை பேராசிரியர்’ என அங்கீகரித்து கௌரவப் பட்டம் வழங்கியதை நினைவுகூர்வது அவசியமாகும்.

இந்த கௌரவம் அவரது சுயாதீனமான கல்விசார் சாதனைகள் மற்றும் நீண்டகால தொழில்முறை பங்களிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகும். பேராசிரியர் விக்கிரமசிங்க களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றுவதுடன், அங்குள்ள பாலினக் கல்வி மையத்தின் நிறுவகப் பணிப்பாளரும் ஆவார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாலின சமத்துவக் கொள்கை மேம்பாடு, பாலின உணர்திறன் பயிற்சி மற்றும் பெண்கள் தொடர்பான திட்டங்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையில் பெண்ணிய ஆராய்ச்சி நெறிமுறை பற்றி அவர் மேற்கொண்ட கலாநிதிப் பட்ட ஆய்வு, சர்வதேச கல்வித்துறையில் அவரது இடத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரூட்லெட்ஜ் நிறுவனத்தால் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அவரது தொழில்முறை பங்களிப்புகளில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுநலவாய பல்கலைக்கழங்களின் சங்கம் மற்றும் பொதுநலவாய செயலகத்தின் திட்டங்கள் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்புகளில் ஆற்றிய பணிகள் அடங்கும். அவர் ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் சபையிலும் பணியாற்றியுள்ளதுடன், கல்விசார் பதிப்புப் பணிகள், பயிற்சி மற்றும் நிறுவன மேம்பாட்டிற்கும் விரிவாகப் பங்களித்துள்ளார்.

குறிப்பாக, களனிப் பல்கலைக்கழகத்தில் அவர் நிறுவிய பாலினக் கல்வி மையம், இலங்கை பல்கலைக்கழக அமைப்பு முழுவதும் இத்தகைய மையங்களை நிறுவுவதற்கு ஊக்கியாக அமைந்தது. இத்தகைய சாதனைகள் அவமதிப்பிற்குரியதாக அன்றி, தேசிய பெருமையின் அடையாளங்களாக இருக்க வேண்டும். பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க அங்கீகரிக்கப்பட்ட நேர்மையும் சிறந்த சுயாதீனமும் கொண்ட ஒரு கல்விமானாவார்.

பொதுப் பொறுப்புக்கூறல் தொடர்பான எந்தவொரு விசாரணைச் செயல்பாடும் முறையான வெளிப்படைத்தன்மையுடனும் சரியான நடைமுறைகளைப் பின்பற்றியும் நடத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்தச் செயல்முறை முதன்மையாக அரசியலில் ஈடுபட்டுள்ள அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதியை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்குள் இழுக்கப்படுவது கடும் கவலையைத் தோற்றுவிக்கிறது.

இத்தகைய சுயாதீன கல்விமான்களுக்கு தேவையற்ற அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் அல்லது நற்பெயருக்குக் களம் விளைவிக்காத வகையில் விசாரணை நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கல்விச் சுதந்திரம், நிறுவன ரீதியான சுயாட்சி மற்றும் அரசியல் பழிவாங்கல்களில் இருந்து கல்விமான்களைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத அங்கமாகும்.

நீதியான மற்றும் விகிதாசாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் முறையான நடைமுறைகளை உறுதிப்படுத்துமாறும், பேராசிரியர் விக்கிரமசிங்கவின் தொழில்முறை சுதந்திரம், கௌரவம் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்குமாறும் நாங்கள் கோருகிறோம்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.